பெண்களே கவனம்.. தினமும் 30 நிமிடங்களாவது இதை செய்யுங்கள்..! மாரடைப்பு வரும் அபாயம் - நடிகை சுஷ்மிதா சென்..!!Actress sushmitha sen speech

தமிழில் ரட்சகன் படத்தில் நாயகியாக நடித்த சுஷ்மிதா சென் இந்தியில் பிரபலமான நடிகை ஆவார். இவர் சங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன் திரைப்படத்தில் சக்கலக்க பேபி பாடலுக்கு நடனமாடியிருந்தார். மேலும் சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின் குணமடைந்தார். 

இந்நிலையில் சுஷ்மிதா சென் பேட்டி அளிக்கையில், "பெண்களில் ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு மாரடைப்பு எப்போதும் வந்துவிடாது என்பதில் எந்த உண்மையையும் இல்லை. இதய நாளங்களில் 90 விழுக்காடு அடைப்பு இருந்தது.

Bollywood cinema

இருந்தாலும் நான் ஆரோக்கியமாக இருந்ததால் காப்பாற்ற முடிந்தது. பெண்கள் தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். மன அழுத்தம் போன்றவை மாரடைப்புக்கு வழிவகை செய்யும். தினமும் குறைந்தது 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.