சினிமா

அட.. நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் தனமா இது! அவரது கல்யாணத்தப்போ எப்படியுள்ளார் பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!

Summary:

அட.. நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் தனமா இது! அவரது கல்யாணத்தப்போ எப்படியுள்ளார் பார்த்தீங்களா! வைரலாகும் வீடியோ!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்த தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி பாசம், கூட்டுக்குடும்பம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. இந்த தொடரில் தனம் என்ற கதாபாத்திரத்தில் அண்ணியாக நடித்து வருபவர் நடிகை சுஜிதா.

பாண்டியன் ஸ்டோர் தொடரில் இவரது கதாபாத்திரம் முக்கியமான ஒன்றாகும். அம்மாவை போல தனது கணவரின் தம்பிகளை பாசத்துடன் கவனித்துக்கொள்ளும் அண்ணி கதாபாத்திரத்தில் நடிக்கும் சுஜாதாவிற்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். முந்தானை முடிச்சு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அவர் அதனை தொடர்ந்து ஏராளமான படங்கள், சீரியல்கள், விளம்பரங்கள் போன்றவற்றில் நடித்துள்ளார்.

நடிகை சுஜிதாவின் கணவர் தனுஷ். இவர் விளம்பர படங்களை இயக்குகிறார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இதற்கிடையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் சுஜிதா அவ்வப்போது தனது குடும்பத்தினருடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவார். இந்த நிலையில் தற்போது சுஜிதாவின் நிஜ திருமண வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். அது வைரலாகி வருகிறது.


Advertisement