BREAKING: மீண்டும் மீண்டுமா.... ஜனநாயகன் பட வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
சூப்பர் ஜோடி!! பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் கணவருடன் செய்த ரீல் வீடியோ! பாராட்டி தள்ளும் ரசிகர்கள்!!
முந்தானை முடிச்சு திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சுஜிதா. அதனை தொடர்ந்து அவர் ஏராளமான படங்கள், சீரியல்கள், விளம்பரங்கள் போன்றவற்றில் நடித்துள்ளார். தற்போது விஜய் தொலைக்காட்சியில் கூட்டுக்குடும்பம், அண்ணன் தம்பி பாசம் போன்றவற்றை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் தனம் என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்த தொடரில் தனது கணவரின் தம்பிகளை அம்மாவாக, பாசத்துடன் பார்த்துக்கொள்ளும் அண்ணியாக நடித்து ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் அவர், அவ்வப்போது புகைப்படம் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் அவர் தற்போது, சப்போஸ் உன்னை காதலுச்சு பாடலுக்கு கணவருடன் செய்த ரீல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் சூப்பர் ஜோடி, செம என பாராட்டி வருகின்றனர்.