சேலையில் சிலை போல் இருக்கும் அழகு சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..

சேலையில் சிலை போல் இருக்கும் அழகு சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ்..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..



actress-sruthiraj-latest-photo

அழகு சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் புடவையில் தேவதை போல் உள்ள கியூட் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தென்றல் தொடரின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஸ்ருதி ராஜ். அத்தொடரில் அவர் நடித்த துளசி என்ற கதாபாத்திரம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அத்தொடர் ஒரு மிடில் கிளாஸ் வாழ்க்கையின் கதையை எடுத்துரைக்கும் வகையில் இருந்தது.

Sun tv

அதனை தொடர்ந்து  அவர் ஆபீஸ், அன்னக்கொடியும் ஐந்து பெண்களும், அபூர்வ ராகங்கள் போன்ற தொடர்களில் நடித்தார். பின்னர்  சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்ற  அழகு சீரியலில், தனது  குடும்பத்திற்காக போராடி வரும் சுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பெரிய வரவேற்பை பெற்றார்.

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ருதி அவ்வப்போது  தனது புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம். இந்த நிலையில் அழகிய சிரிப்புடன் அன்றும் இன்றும் இளமை குறையாமல் தேவதை போல் உள்ள கியூட் புகைப்படம் ஒன்றை பதிவிட தற்போது அந்த புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.