சினிமா

ப்பா.. எம்புட்டு அழகு..! புடவையில் தேவதைபோல் இருக்கும் ஸ்ரீதிவ்யா.. வைரலாகும் புகைப்படம்..

Summary:

நடிகை ஸ்ரீதிவ்யா அழகிய புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

நடிகை ஸ்ரீதிவ்யா அழகிய புகைப்படம் ஒன்று ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளமே உருவானது.

அதனை தொடர்ந்து இவர் காக்கி சட்டை, பென்சில், மருது, வெள்ளைக்காரதுரை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலு‌ம் இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

தற்போது பட வாய்ப்புகள் இன்றி தவித்துவரும் ஸ்ரீதிவ்யா, விளம்பரங்களிலும் நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவ் ஆக இருக்கும் இவர், சமீபத்தில் புடவையில் இருக்கும் புகைப்படம் ஒன்றை இணையத்தில் பதிவிட, தற்போது அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகி வருகிறது.


Advertisement