சினிமா

வாவ்.. செம கியூட்ல! முதன் முறையாக தனது செல்ல குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராஜாராணி சீரியல் நடிகை!

Summary:

தமிழில் செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. அதன

தமிழில் செல்லமடி நீ எனக்கு என்ற சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி. அதனை தொடர்ந்து அவர் சன் டிவி, விஜய் டிவி என பல தொலைக்காட்சிகளிலும் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். நடிகை ஸ்ரீதேவி தங்கம், இளவரசி, பிரிவோம் சந்திப்போம், வாணி ராணி, கல்யாண பரிசு என பல தொடர்களிலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி சீரியலில் வில்லியாக நடித்திருந்தார். அந்த தொடரில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில்  பெருமளவில் ரீச்சாகி மேலும் பிரபலமானார். நடிகை ஸ்ரீ தேவி ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் தான் கர்ப்பமாக இருக்கும் மகிழ்ச்சியான செய்தியை ரசிகர்களிடம் பகிர்ந்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை ஸ்ரீதேவிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகிய பெண்குழந்தை பிறந்தது. அதனை தொடர்ந்து தற்போது முதன்முறையாக நடிகை ஸ்ரீதேவி தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது ரசிகர்கள் மத்தியில் வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் செம க்யூட் என கொஞ்சி வருகின்றனர்.

 

 


Advertisement