வசூலை வாரி அள்ளும் நடிகர் தனுஷின் தேரே இஷ்க் மெய்ன்.! 10 நாட்களில் மட்டுமே வசூல் எவ்வளவு தெரியுமா??
எனது -------- ஷை தின்னு. பிரபல நடிகரை காரி துப்பிய ஸ்ரீ ரெட்டி!
இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் தன்னை பாலியல் ரீதியாக ஏமாற்றி விட்டனர், வாய்ப்பு தருவதாக கூறி தன்னை உபயோகித்துவிட்டு வாய்ப்பும் தரவில்லை என தென்னிந்திய சினிமாவில் அதிர்வலைகளை கிளப்பினார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
தெலுங்கு நடிகை, ஸ்ரீரெட்டி நடத்திய அரை நிர்வாண போராட்டம் தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபல தெலுங்கு நடிகர் உட்பட பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீதும் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்த இவர் பிரபல இயக்குனர்கள் முருகதாஸ், சுந்தர் சி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என தமிழ் சினிமா என பிரபல தமிழ் நட்சத்திரங்கள் மீது தொடர்ந்து ஸ்ரீரெட்டி பாலியல் புகாரை கூறி வந்தார்.
இதனைத் தொடர்ந்து பல்வேறு சேனல்களின் மூலம் பல புகார்களை கூறி வரும் ஸ்ரீரெட்டி, திரைத்துறை பிரபலங்களை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கத்தில் செயல்படுவதாகவும், அதனால் அவர் மீது விபச்சார வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் சமீபத்தில் நடிகரும், இயக்குனருமான வாராகி என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், தன்மீது புகார் அளித்த இயக்குனர் மீது கடும் கோபமடைந்த இவர், இன்று தனது முகநூல் பக்கத்தில் “வாராகி இன்றைக்கு உன் கன்னத்தில் அறையப்போகிறேன். அதற்கு நீ தகுதியானவன்தான். பாதிக்கப்பட்ட எனக்கு மரியாதை கொடுக்கவில்லை. அதற்கு பதில் நீ என் மலத்தை சாப்பிடலாம். என்ன ஒரு கேவலமான விளம்பரம் தூ” என காட்டமாக பதிவிட்டுள்ளார்.