சினிமா

ஃபாரின் சாங் சூட்டிங் செல்வதே கசமுசா செய்யத்தான். சொன்னது யார் தெரியுமா?

Summary:

Actress sri reddy talks about her story

தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள் மீது தொடர்ந்து பாலியல் புகார் அளித்துவருகிறார் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி, நடிகைகளை அவர்கள் எவ்வாறு படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்பதை தானே முவந்து விளக்கியுள்ளார் . 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தெலுங்கு திரைப்பட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் நடிகைகளுக்கு வாய்ப்பு தர, அவர்களை படுக்கைக்கு அழைப்பதாக குற்றம் கூறி அரை நிர்வாண போராட்டம் நடத்தினர்.

 அதன்பிறகு அவரது பார்வை தமிழ் சினிமா பக்கம் திரும்ப, இங்கும் சில நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் மீதும் வரிசையாக  புகார் அளித்துவருகிறார். இந்த நிலையில், திரைத்துறையினர் நடிகைகளை எவ்வாறு படுக்கைக்கு அழைக்கிறார்கள் என்ற அதிர்ச்சிகரமான தகவலை நடிகை ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.

நடிகைகளை படுக்கைக்கு அழைக்க முடிவு செய்யும் இயக்குநர்களோ அல்லது நடிகர்களோ, படத்தின் தயாரிப்பாளர், கதை எழுதுவோர், நடிகர், நடிகைகளை பிடித்து தரும் ஏஜெண்டுகள் அல்லது மேனேஜர்கள் மூலம் வலைவிரிப்பதாக தெரிவித்துள்ளார். 

நான் உனக்கு வாய்ப்பு கொடுப்பதால் சினிமா துறையில் நீ பெரிய ஆளாக வரப்போகிறாய். இதனால் தனக்கு என்ன பயன் என்று கூறுவதே இதன் முதல் தொடக்கம் என கூறுகிறார் நடிகை ஸ்ரீ ரெட்டி.

ஒரு சில நடிகர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நடிகைகளை காரில்  அழைத்துக் கொண்டு, நீண்டதூரம் பயணம் செய்வதும் , பின்னர் காரையே ஓரமாக நிறுத்திவிட்டு காரையே படுக்கை அறையாக மாற்றி நடிகைகளுடன் உல்லாசமாக இருப்பார்கள் என்றும், தேவையில்லாமல் ஓட்டல்களில் ரூம் எடுத்து, பிரச்சனையில் மாட்டி கொள்வதைத் தவிர்க்க சிலர் செய்யும் செயல் இது என்றும் கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.

ஒரு பாடலுக்காக ஏன் வெளிநாடு செல்கிறார்கள் என்று நீங்கள் யோசித்தது உண்டா?  அவ்வாறு அவர்கள் வெளிநாடு செல்வதே, நடிகைகளை அனுபவிக்கத்தான் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி குண்டைத் தூக்கிப் போடுகிறார்.

தயாரிப்பாளர்கள், நடிகர்கள் மட்டும் இல்லாமலா ஒரு சில நேரங்களில் மேனேஜர், கேமராமேன், மேக்கப் மேன் என அனைவரையும் நடிகை திருப்திபடுத்த வேண்டும் என்றும் அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக்குகிறார் நடிகை ஸ்ரீரெட்டி. 

தமிழ்த்திரைப்படத்துறையினர் பலர், நடிகைகளுடன் உல்லாசமாக இருக்க ஹைதராபாத்தையே தேர்வு செய்வதாகவும் கூறியுள்ள ஸ்ரீரெட்டி, தமிழகத்தில் இருக்கும் நற்பெயரை காப்பாற்றிக் கொள்ளவே அவர்கள், மாநிலங்களைக் கடந்து உல்லாசம் அனுபவிக்கின்றனர் என்றும் நடிகை ஸ்ரீரெட்டி விவரித்துள்ளார்.


Advertisement