அதுக்குள்ள அவசரமா?.. அடுத்த டேட்டுக்கு ரெடியாகும் புதிய தாயான பிரபல நடிகை..! ஹார்ட்டின் பறக்குதே.!!

அதுக்குள்ள அவசரமா?.. அடுத்த டேட்டுக்கு ரெடியாகும் புதிய தாயான பிரபல நடிகை..! ஹார்ட்டின் பறக்குதே.!!


Actress Sonam Kapoor Trip dating

பாலிவுட் திரையுலகின் பிரபல நடிகையாக இருப்பவர் சோனம் கபூர். இவர் பிரபல நடிகர் அனில்கபூரின் மகள் ஆவார். மேலும், இவர் நடிகர் தனுஷ் ஹிந்தியில் நடித்த ராஞ்சனா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். 

சோனம் கபூரின் கணவர் ஆனந்த் அகுஜா. கடந்த 2018-ஆம் ஆண்டில் இவர்களுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், தம்பதிகளுக்கு கடந்த ஆகஸ்டில் ஆண் குழந்தை பிறந்தது. இந்த மகிழ்ச்சியை தனது சமூகஊடகத்தில் சோனம் கபூர் பகிர்ந்திருந்தார். 

புதிய தாயான அவருக்கு ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் ரசிகர்களை எப்பொழுதும் பரபரப்பாக வைத்திருக்க வேண்டும் என்ற ஆர்வமுடையவர் சோனம். 

sonam kapoor

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அந்த படத்திற்கு தலைப்பாக "எங்களுக்கிடையே நிச்சயம் நடந்தபின் வாழ்க்கை நன்றாக மாறியது" என தெரிவித்துள்ளார். "டேட்டிங் செல்வதற்காக இன்னும் காத்திருக்க முடியாது, ஒவ்வொரு நாளும் சிறந்தது" என தெரிவித்து இதயமோஜி ஒன்றையும் அடையாளத்திற்கு பதிவிட்டுள்ளார். 

இதற்கு சோனம்கபூரின் கணவர் அதே பதிவில் அளித்த பதிலில், "இது பற்றி உன்னுடைய பெற்றோரிடம் நான் பேசிய பின்னரே சரியாக இருக்கும். ரொம்ப தான் அழகு" என்று தெரிவித்துள்ளார். நடிகர் சோனம் பதிவிற்கு அவரது தாயார் சுனிதா மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்களும் அன்புமழையை பொழிந்துள்ளனர்.