பாழாய்ப்போன குடியால் மனநோயாளியான தமிழ் நடிகையின் மகன்.. தந்தை, சகோதரியை கொடூரமாக கொன்ற பயங்கரம்..!!actress-son-killed-his-father-and-sister

மதுபோதைக்கு அடிமையான டப்பிங் கலைஞர், தனது தந்தை மற்றும் சகோதரியை கொலை செய்த பயங்கரம் சென்னையில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் உள்ள மாங்காட்டில் தனது குடும்பத்துடன் வசித்து வரும் துணை நடிகை சாந்தி. இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். சாந்தியின் கணவர் செல்வராஜ், இசைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

தம்பதிக்கு பிரியா என்ற மகளும், ராஜேஷ் மற்றும் பிரகாஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் பிரகாஷ் தவிர்த்து இருவருக்கும் திருமணமாகி அவரவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். பிரியா தனது வீட்டருகே கணவருடன் வசித்து வருகிறார்.

பிரகாஷ் தனது பெற்றோருடன் தங்கியிருந்த நிலையில், போதை பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. டப்பிங் பணியாளராகவும் அவர் வேலை பார்க்கிறார். போதைக்கு அடிமையான பிரகாஷ் சம்பவத்தன்று வீட்டில் தனது தந்தை செல்வராஜை கொலை செய்துள்ளார்.

பின்னர், அங்கிருந்து தனது தங்கை பிரியாவை பார்க்க சென்ற பிரகாஷ், அவரை கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். சம்பவ இடத்திலேயே பிரியா பலியாகிவிட, அவரின் இறப்பு செய்தி அறிந்து நடிகை தனது மகன் ராஜேஷுடன் மகளின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

tamil cinema

அங்கு செல்வராஜ் வராததால் சந்தேகம் அடைந்து வீட்டிற்கு சென்றுபார்த்தபோது, அங்கு பிரகாஷும் பிணமாக இருந்துள்ளார். இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த மாங்காடு காவல் துறையினர், இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

தந்தை மற்றும் தங்கையை கொலை செய்த பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்துகையில், மதுபோதையில் அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்ட பிரகாஷை, பெற்றோர் இலட்சக்கணக்கில் செலவு செய்து கவனித்து வந்துள்ளனர். பணம் அனைத்தும் விரயமாகியதால், வேறு வழியின்றி கீழ்பாக்கம் மனநல மருத்துவமனையில் பிரகாஷை சேர்க்க செல்வராஜ் பேசியுள்ளார். 

இந்த தகவலை ஒளிந்துகொண்டு கேட்ட பிரகாஷ், செல்வராஜை முதலில் கொலை செய்துள்ளார். பின்னர் தனது தங்கையின் வீட்டிற்கு சென்று வாக்குவாதம் செய்து, அவரையும் சரமாரியாக கழுத்தில் குத்தி கொன்றுள்ளார். இறுதியாக பிரகாஷின் தாயார் கொலை செய்ய முயற்சி நடந்த நிலையில், அவர் மருந்தகத்திற்கு சென்றதால் தப்பித்துக்கொண்டார்.