சினிமா

வாவ்.. நடிகர் சிபிராஜின் மகன்களா இது! அப்படியே அப்பாவை உரிச்சு வச்சிருக்காங்களே!

Summary:

தமிழ் சினிமாவில் ஸ்டூடண்ட் நம்பர் 1 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, அதனைத்

தமிழ் சினிமாவில் ஸ்டூடண்ட் நம்பர் 1 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமாகி, அதனைத் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்தவர் நடிகர் சிபிராஜ்.  திறமையான நடிகரான இவர் பல படங்களில் நடித்திருந்தாலும் அவை சொல்லிக்கொள்ளும் அளவிற்கு கைகொடுக்கவில்லை. நடிகர் சிபிராஜ் தமிழில் ஏராளமான ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்த சத்யராஜின் மகனாவார். சிபி இறுதியாக கபடதாரி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகர் சிபிராஜ் கடந்த 2008ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரேவதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். அவர்களில் மூத்த மகன் தீரன். அவர் டேக்வோண்டா எனப்படும் தற்காப்பு கலையை கற்று வருகிறார். மேலும் அண்மையில் புனேவில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் கலந்து கொண்ட இரண்டு பதக்கங்களையும் வென்றுள்ளார்.

இந்த நிலையில் நடிகர் சிபிராஜின் இருமகன்களது புகைப்படம் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனைக்கண்ட நெட்டிசன்கள் அப்படியே ப்பவை உரிச்சு வச்சுருக்கீங்களே என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


Advertisement