சினிமா

நடிகை ஸ்ருதிஹாசனுக்கு மிகவும் பிடித்த நடிகர் இவர்தானாம்! அவரே சொன்ன பதில்!

Summary:

Actress shruthi hashan said who is her favorite hero

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் உலகநாயகன் கமலஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இன்று விஸ்வரூபமாய் வளர்ந்து நிற்கும் நமது கமலஹாசன் வெறும் நடிகர் மட்டும் அல்ல. மக்கள் நீதி மய்ய கட்சியின் தலைவரும் கூட. இவருக்கு ஸ்ருதிகாசன், அக்ஷராஹாசன் என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இருவருமே தந்தையைப்போல சினிமாவிற்குள் வந்து தனி தனியாக கலக்கி வருகின்றனர். இந்நிலையில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் மூலம் நாயாகியாக அறிமுகமானவர் ஸ்ருதிகாஷன். அதை தொடர்ந்து விஜய், அஜித், விஷால் என தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நடிகை ஸ்ருதிகாஷன்.

தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஹலோ சகோ எனும் தொடரை தொகுத்து வழங்கிவருகிறார் ஸ்ருதிகாஷன். இந்த நிகழ்ச்சியில் நண்பர்களாக இருக்கும் இரண்டு பிரபலங்கள் கலந்துகொள்வார்கள். அவர்களுக்குள் இருக்கும் புரிதல் பற்றியும், அவர்களது சுவாரசிய அனுபவங்கள்பற்றியும் கேள்வி எழுப்புவர் நடிகை ஸுருதிஹாசன்.

அந்தவகையில் இன்று நடிகை ஐஸ்வர்யா ராஜேசும், பாடகர் அருண் காமராஜும் கலந்துகொண்டனர். அப்போது நடைபெற்ற கலந்துரையாடலில் தனக்கு மிகவும் பிடித்த நடிகர்ப்பற்றி கூறினார் நடிகை ஸ்ருதிகாஷன்.

அவர்க்குக்கு மிகவும் பிடித்த நடிகர் வேறு யாரும் இல்லை பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருகான்தானாம். மேலும் இந்த இடம் முழுவதும் அவர் நிறைந்துள்ளார் என்றும் பதில் அளித்தார் நடிகை ஸ்ருதிகாஷன்.


Advertisement