வாய்ப்புக்காக நடிகை செய்த கேவலமான செயல்! போலீஸ் விசாரணையில் வெளியான உண்மை!
நடிகை ஸ்ருதி ஹரிஹரன் படப்பிடிப்பின்போது நடிகர் அர்ஜுன் பாலியல் ரீதியாக எனக்கு தொல்லை கொடுத்தார் என்று சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்தினார். பாடகி சின்மயி தொடர்ந்து பிரபலமான நடிகைகள் மற்றும் பெண்கள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை பற்றி சமீபத்தில் தெரிவித்து வந்த வண்ணம் இருந்தனர். இந்த நிலையில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் தனது பங்குக்கு நடிகர் அர்ஜுன் மீது பாலியல் குற்றம் சுமத்தினார்.
நடிகர் அர்ஜுனும் ஸ்ருதி ஹரிஹரனும் கணவன்-மனைவியாக இணைந்து நடித்த கன்னட படம் விஸ்வமயா. இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அனைவரின் முன்னிலையில் என் அனுமதியில்லாமல் அர்ஜுன் என்னை கட்டி பிடித்தார் என்று பரபரப்பு குற்றம் சுமத்தினார்.
இந்த நிலையில் நடிகர் அர்ஜுன் தன் மீது பொய் குற்றம் சுமத்தியுள்ளார். எனவே மானநஷ்ட ஈடு வழக்கு தொடர்வேன் என்று தெரிவித்த நிலையில் ஸ்ருதி ஹரிஹரன் அர்ஜுன் மீது பெங்களூர் கப்பன் பார்க் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் நடிகை ஸ்ருதி கூறிய பொய் ஒன்று போலீஸ் விசாரணையில் அம்பலமாகி உள்ளது.கடந்த சில மாதங்களாக நடிகை ஸ்ருதிக்கு திருமணம் ஆனதாக சில செய்திகள் வெளியாகி வந்தன.
ஆனால், இந்த செய்தியை தொடர்ந்து மறுத்து வந்தார் நடிகை ஸ்ருதி, ஆனால், நடிகர் அர்ஜுன் மீது அளித்துள்ள புகாரில் நடிகை ஸ்ருதி, தனக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் தனது கணவர் பெயர் ராம் குமார் என்றும் குறிப்பிட்டுள்ளாராம். இதனால் பட வாய்ப்பிற்காக தனக்கு திருமணம் ஆனதையே மறுத்து இத்தனை நாட்கள் ஸ்ருதி நாடகமாடியுள்ளார் என்று நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.