16 வயதில்.. முதல்முறையாக புடவை கட்டியபோது நடிகை ஸ்ரேயா எப்படி இருக்காரு பாத்தீங்களா! செம கியூட்ல!!

Summary:

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் ஸ்ரேயா சரண். அவர் உனக்கு 20 எனக்கு

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளுள் ஒருவராக இருந்தவர் ஸ்ரேயா சரண். அவர் உனக்கு 20 எனக்கு 18 என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாதுறையில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த மழை என்ற படத்தில் ஹீரோயினாக நடித்தார். இப்படத்தின் மூலம் அவர் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார்.

அதனைத் தொடர்ந்து அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்த நிலையில் அவர் ரஜினி, விஜய், விக்ரம், தனுஷ் என பல நடிகர்களுடன் இணைந்து சில படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் சில தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். பின்னர் நாளடைவில் ஸ்ரேயாவுக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில் அவர் ரஷ்யாவை சேர்ந்த தனது காதலர் ஆன்ட்ரெய் கோஸ்ச்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

 சமூக வலைத்தளங்களில் பிஸியாக இருக்கும் ஸ்ரேயா அவ்வப்போது ஏதேனும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிடுவார். இந்த நிலையில் ஸ்ரேயா தற்போது 16 வயதில் முதன் முறையாக புடவை கட்டி தனது தோழிகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் செம க்யூட் என கமெண்டு செய்து வருகின்றனர்.


Advertisement