சமந்தா, தனுஷ் தொடர்ந்து விவாகரத்திற்கு தயாராகிறாரா இந்த பிரபல நடிகை! இதுதான் காரணமா? செம ஷாக்கில் ரசிகர்கள்!!

சமந்தா, தனுஷ் தொடர்ந்து விவாகரத்திற்கு தயாராகிறாரா இந்த பிரபல நடிகை! இதுதான் காரணமா? செம ஷாக்கில் ரசிகர்கள்!!


actress-shilpa-shetty-going-to-divorce-her-husband-news

தற்போது திரைத்துறையில் விவாகரத்து என்பது பெருமளவில் அதிகரித்து வருகிறது.  தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது கணவர் நாகசைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அது அடங்குவதற்கு முன்பே நடிகர் தனுஷ் மற்றும் அவரது மனைவியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து பெற்று பிரிய போவதாக அறிவித்தனர்.

இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டியும் அவரது கணவரை விவாகரத்து செய்து பிரிய போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ்குந்த்ரா ஆபாசப் படங்களைத் தயாரித்து, விநியோகம் செய்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இதனால் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்த ஷில்பா தற்போது கணவர் ராஜ்குந்த்ராவை விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

samantha

மேலும் அவர் தனது கணவர் ராஜ்குந்த்ரா பெயரில் உள்ள ரூ.39 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் கணவர் பெயரில் இருந்த பண்ணை வீட்டை தனது பெயருக்கு மாற்றியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கணவரை பிரியும் எண்ணத்திலேயே அவர் அவ்வாறு செய்ததாக தகவல்கள் பரவி வருகிறது.