சினிமா பிக்பாஸ்

பிக்பாஸ் பிரபல நடிகையின் வாழ்வில் இப்படி ஒரு சோகமா! ரசிகர்களை கண்கலங்க வைத்த சம்பவம் என்ன தெரியுமா?

Summary:

actress sherin about her personal life

2002 ஆம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தில் நடிகர் தனுசுக்கு ஜோடியாக அறிமுகமானவர் நடிகை ஷெரின். முதல் படத்திலே வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தார். அதன் பிறகு தெலுங்கு, கன்னடா, மலையாள படங்களில் நடித்தார்.

திரைத்துறையில் பல முயற்சிகள் எடுத்தும் அவரால் நிலைத்து நிற்க முடியவில்லை. நாளடைவில் சிறு சிறு வேடங்களில் நடிக்க துவங்கினார். தமிழில் கடைசியாக நண்பேன்டா படத்தில் நடித்தார் ஷெரின். இசைத்துறையில் மிகுந்த ஆர்வம் கொண்ட ஷெரின் இசை கற்றுக்கொண்டு டிஜேவாக தற்போது இருந்து வருகிறார்.

இதுவரை திருமணம் ஆகாத ஷெரின் தற்போது இன்று துவங்கியுள்ள பிக் பாஸ் சீசன் தமிழ் 3ல் ஒரு போட்டியாளராக கலந்துகொண்டுள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு ஷெரீனை பார்த்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்; காரணம் எடை அதிகமாகி ஆள் அடையாளமே தெரிவதால் தான். 

மேலும் பிக் பாஸ் வீட்டிற்கு உள்ளே செல்லும் முன்பு ஷெரின் பகிர்ந்துகொண்ட சம்பவம் ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது. அது என்னவெனில், கடந்த 8 ஆண்டுகளாக ஷெரின் தனது காதலருடன் ஒன்றாகவே வாழ்ந்து வந்துள்ளார். மிக நெருக்கமாக திருமணம் செய்யும் அளவிற்கு வந்த அவர்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரிந்து விட்டார்களாம். 


Advertisement