சினிமா

என் இளவரசி.. முதன்முதலாக ரோஜா சீரியல் பிரபலம் வெளியிட்ட வீடியோ! எம்புட்டு அழகு பார்த்தீங்களா!

Summary:

என் இளவரசி.. முதன்முதலாக ரோஜா சீரியல் பிரபலம் வெளியிட்ட வீடியோ! எம்புட்டு அழகு பார்த்தீங்களா!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று விறுவிறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் ஒளிபரப்பாகி வரும் தொடர் ரோஜா. இந்தத் தொடரில் முதலில் அனு என்ற கதாபாத்திரத்தில் பயங்கர வில்லியாக நடித்து அனைவரையும் மிரள வைத்தவர் ஷாமிலி சுகுமார்.

தனக்கு கொடுத்த நெகடிவ் கதாபாத்திரத்திற்கு ஏற்ப ஷாமிலி மிகவும் அசத்தலாக தனது நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும்  பிரமிக்க வைத்தார். ரோஜா தொடரின் வெற்றிக்கு இவரது நடிப்பும் ஒரு காரணம் எனலாம். இந்த நிலையில் கர்ப்பமாக இருந்ததால் அவர் சில மாதங்களுக்கு முன்பு தொடரை விட்டு பாதியிலேயே விலகினார்.

அதனை தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆகட்டிவாக இருந்த அவர் அவ்வப்போது தனது கர்ப்பகால புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் அண்மையில் ஷாமிலிக்கு அழகிய பெண்குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அவர் தெரிவித்த நிலையில் பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில் முதன்முறையாக ஷாமிலி தனது குழந்தையின் வீடியோ ஒன்றை எனது தேவதை என பதிவிட்டு வெளியிட்டுள்ளார். அது வைரலாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.


Advertisement