சினிமா

சூரிக்கு ஜோடியாக நடித்தவரா இது? வெளியான கவர்ச்சி புகைப்படத்தால் வாயடைத்துப்போன ரசிகர்கள்!!

Summary:

actress shalu shamu glamour photo viral

தமிழ் சினிமாவில் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் வருத்தபடாத வாலிபர் சங்கம். நடிகர் சிவகார்த்திகேயனின் இந்த வளர்ச்சிக்கும், புகழுக்கும் காரணாமாக இருந்த படங்களில் இதுவும் மிக முக்கியமான ஒன்று. இந்த படத்தில் சிவாவுக்கு ஜோடியாக ஸ்ரீ திவ்யா நடித்திருப்பார்.

மேலும் சத்யராஜ், சூரி, சிறு வேடத்தில் பிந்து மாதவி என முக்கிய நடிகர் நடிகைகள் பலரும் நடித்திருந்தனர். இதில் நாயகி ஸ்ரீ திவ்யாவுக்கு தோழியாக, நகைச்சுவை நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிகை ஷாலு ஷம்மு நடித்திருப்பார். படத்தில் சிறு சிறு காட்சிகளில் இவர் வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இவரது கதாபாத்திரத்துக்கு நல்ல வரவேற்பு இருந்தது.

shalu shamu க்கான பட முடிவு

மேலும் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கருப்பழகியாக ஒரு கிராமத்து பெண் போல நடித்திருந்த அவர் சமீபகாலமாக தனது மாடர்ன் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில்அவர் தற்போதும் தனது கவர்ச்சியான மாடர்ன் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.இதனை கண்ட ரசிகர்கள் சூரிக்கு ஜோடியாக நடித்தவரா இது என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.


Advertisement