அந்தமானில் கச்சேரி.. இன்ப சுற்றுலா சென்ற அய்யனார் துணை நடிகர்கள்.. வைரலாகும் வீடியோ.!
அம்மாடி.. அதிதி ஷங்கருக்கே டப் கொடுக்கும் ஷாலுஷம்மு.. கோவிலில் வைத்து குத்தாட்டம்..! தீயாய் பரவும் வீடியோ..!!
சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் நாயகி ஸ்ரீ திவ்யாவுக்கு தோழியாக நடித்தவர் ஷாலு ஷம்மு. நடிகர் ஆரியுடன் சேர்ந்த இவரின் நகைச்சுவை கதாபாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படத்திற்கு பின்னர் பிரபலமான ஷாலு ஷம்மு, பல தமிழ் படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிக்கும் படங்கள் அவருக்கு பெரிய அளவில் கைகொடுப்பது இல்லை. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், திருட்டு பயலே, இரண்டாம் குத்து உட்பட பல படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் எப்போதும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிடுவது வழக்கம். இந்நிலையில், தற்போது கோவிலில் வைத்து விருமன் படத்தின் மதுரை வீரனின் அழகில் என்ற பாடலுக்கு நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.