பட வாய்ப்பின்றி தவிப்பு; அரை கோடியில் கார் வாங்கிய தமிழ் நடிகை..! விளாசும் ரசிகர்கள்..!! 

பட வாய்ப்பின்றி தவிப்பு; அரை கோடியில் கார் வாங்கிய தமிழ் நடிகை..! விளாசும் ரசிகர்கள்..!! 



Actress shalu shammi buy car

 

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தின் மூலமாக தமிழ்துறையில் அறிமுகமான நடிகை ஷாலு சம்மு. இவர் அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகர்களுக்கு ஜோடியாகவும், தோழியாகவும் நடித்து பிரபலமானார்.

இன்ஸ்டாகிராம் மூலமாக அவ்வப்போது கவர்ச்சி வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டு வரும் இவர் புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கிறார். இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பதிவிட்டுள்ளார்.

ரூ.45 லட்சம் மதிப்புள்ள காரை அவர் வாங்கி இருக்கும் நிலையில், சினிமா வாய்ப்பு இல்லாமல் தவிப்பதாக கூறிவிட்டு எப்படி இவ்வாறான காரை வாங்கினீர்கள்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

மேலும் நடிகை ஷாலு சம்மு சினிமா நடிகர்களின் சருமம் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்யும் பெரிய மருத்துவமனை ஒன்றை நடத்தி வருவதாகவும், அதில் வந்த வருமானத்தை கொண்டு கார் வாங்கி இருக்கலாம் என்றும் தெரியவருகிறது.