சினிமா

தனது திருநங்கை மகளுக்காக நடிகை ஷகீலா மகளுக்காக செய்த காரியம்! திடீர்னு ஏன்? அப்படியென்ன விசேஷம் தெரியுமா??

Summary:

80,90ஸ் காலகட்டங்களில் பல மொழிகளிலும் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து தனது கவர்ச்சியால் ரசி

80,90ஸ் காலகட்டங்களில் பல மொழிகளிலும் ஏராளமான ஆபாச படங்களில் நடித்து தனது கவர்ச்சியால் ரசிகர்களை கட்டிப்போட்டவர் ஷகிலா. அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டபின் அவரது பேச்சு மற்றும் செயல் அவர் மீதான பார்வையை முற்றிலும் மாற்றியது. 

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மற்றும் கோமாளிகள் அனைவரும் அவரை அம்மா, மம்மி என பாசத்துடன் அழைத்து வந்தனர். இந்நிலையில் அசத்தலாக சமைத்து வந்த ஷகிலா  இறுதிப்போட்டி வரை சென்று குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இரண்டாவது இடத்தை பிடித்தார்.

திருமணம் செய்துகொள்ளாத நடிகை ஷகீலா திருநங்கை ஒருவரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். அவரது  பெயர் மிலா. இவர் நடிகை மற்றும் ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் மிலா அண்மையில் 100k பாலோவர்களை பெற்றுள்ளார். அதற்காக நடிகை ஷகிலா தனது மகள் மிலாவிற்கு சர்ப்ரைஸாக ஐ பார்ட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.


Advertisement