60 வயது நபருக்கு ஜோடியாகும் 23 வயது நடிகை சயீஷா..! அப்பா வயது நடிகருடன் டூயட்டா!!

60 வயது நபருக்கு ஜோடியாகும் 23 வயது நடிகை சயீஷா..! அப்பா வயது நடிகருடன் டூயட்டா!!


actress-shaesha-pair-with-balayya-viral-in-bb3

தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் சயீஷா. இந்த தகவலை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இயக்குனர் போயப்பட்டி ஸ்ரீனு இயக்கத்தில் மூன்றாவது முறையாக கூட்டணி சேர்ந்து BB3 என்ற படத்தில் நடித்துவருகிறார் பாலகிருஷ்ணா. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் உருவான முதல் இரண்டு படங்களும் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

BB3

முன்னதாக இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அல்லது அமலாபால்தான் நாயகியாக நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது நடிகை சாயிஷா இந்த படத்தில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

BB3

இந்த படத்தில் பாலகிருஷ்ணா இரட்டை வேடத்தில் நடித்துவருகிறார். இந்நிலையில் 61 வயதாகும் நடிகர் பாலகிருஷ்ணாவுக்கு 23 வயதாகும் நடிகை சாயிஷாவை ஜோடியாக நடிக்க வைப்பது சற்று அதிகம்தான் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துவருகின்றனர். இன்னும் சிலர், அப்பா வயது நபருக்கு சாயிஷா ஜோடியா எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.