சினிமா

என்னது.. அவன் இவன் படத்தில் விஷாலுக்கு குரல் கொடுத்தது இந்த பாரதிகண்ணம்மா சீரியல் நடிகைதானா! யார்னு பார்த்தீர்களா!!

Summary:

என்னது.. அவன் இவன் படத்தில் விஷாலுக்கு குரல் கொடுத்தது இந்த பாரதிகண்ணம்மா சீரியல் நடிகைதானா! யார்னு பார்த்தீர்களா!!

கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அவன் இவன். பாலா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இருவரும் நடித்திருந்தனர். வித்தியாசமான கதைக்களத்துடன் வெளிவந்த இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இப்படத்தில் விஷால் கண் கருவை மையத்தில் வைத்து மிகவும் கஷ்டப்பட்டு வித்தியாசமான கெட்டப்பில் நடித்திருந்தார். மேலும், ஒரு சில காட்சிகளில் அவர் பெண் வேடமிட்டு நடித்திருப்பார். அதாவது அவர் ஒரு காட்சியில் பெண் வேடமணிந்து பெண் காவலர் ஒருவர் வீட்டிற்கு திருட சென்றிருப்பார். அந்த காட்சியில் நிகழக்கூடிய உரையாடலுக்கு பாரதிகண்ணம்மா சீரியல் நடிகைதான் டப்பிங் கொடுத்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அது வேறு யாருமல்ல.  பாரதி  கண்ணம்மா தொடரில் கண்ணம்மாவின் சித்தியாக, அஞ்சலியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துவரும் நடிகை செந்தில்குமாரிதானாம். இவர் வெள்ளித்திரையில் களவாணி, கடைக்குட்டி சிங்கம் மற்றும் சுல்தான் ஆகிய திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.  மேலும் கனா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் ஆவார்.


Advertisement