சினிமா

நடிகர் விஜய்யால் பிரபல சீரியல் நடிகைக்கு நேர்ந்த சோகம்! அவரே கூறிய உண்மை தகவல்!

Summary:

Actress senthil kumari talks about her experince to meet vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய். தற்போது அட்லீ இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்துவருகிறார் விஜய். படம் விளையாட்டை மையமாக கொண்ட படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிகம் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துவருகிறார். படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தளபதி விஜய்யை நேரில் பார்க்க ஆசைப்பட்டு மண்டையில் அடிபட்ட நிகழ்ச்சி பற்றி கூறியுள்ளார் பிரபல நடிகை செந்தில் குமாரி. இது பற்றி கூறிய அவர் திருப்பாச்சி படப்பிடிப்பின்போது விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என ஆசைப்பட்டு தன் வீட்டிலிருந்து கிளம்பும் போது தன்னுடைய கணவர்,  விஜயை பார்க்க செல்ல கூடாது என சண்டையிட்டு ஆத்திரத்தில் என்னை கீழே தள்ளினார்.

இதில் ஏன் தலையில் காயம் ஏற்பட்டது என அவருடைய பழைய நினைவை பகிர்ந்துள்ளார். அதையெல்லாம் பொருட்படுத்தாமல் கூட நான் விஜய்யை பார்க்க சென்றேன் என்றும் அவர் தெரிவித்து உள்ளார் 


Advertisement