என்னது.. பிச்சைக்காரன் பட ஹீரோயினுக்கு இவ்வளவு பெரிய மகனா.! அவரது கணவர் இவர்தானா?? ஷாக்கில் ரசிகர்கள்!!

என்னது.. பிச்சைக்காரன் பட ஹீரோயினுக்கு இவ்வளவு பெரிய மகனா.! அவரது கணவர் இவர்தானா?? ஷாக்கில் ரசிகர்கள்!!



actress-satnaa-family-photo-viral

தமிழ் சினிமாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்ற திரைப்படம்தான் பிச்சைக்காரன். குறைவான பட்ஜெட்டில் உருவான இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி நல்ல வசூலை பெற்று தந்தது. பிச்சைக்காரன் படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சாட்னா.

கேரளாவை பூர்வீகமாக கொண்ட சாட்னா பிறந்து வளர்ந்தது சென்னையில்தான். இந்த நிலையில் அவர் 2016 ஆம் ஆண்டு கார்த்திக் என்பவரை பதிவுத் திருமணம் செய்து கொண்டார். கார்த்திக் பிச்சைக்காரன் படத்தின் விநியோகிஸ்தர். அவர்களது திருமணத்தின் போது சாட்னா குடும்பத்தார்கள் கார்த்திக் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்து பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

பின்னர் சில காலம் கழித்து அந்தப் புகார் திரும்ப பெறப்பட்டு 2017ஆம் ஆண்டு இவர்களது திருமண வரவேற்பு நடைபெற்றது. அவர்களுக்கு கிரண் என்ற ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் நடிகை சாட்னா கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதனைக் கண்ட நெட்டிசன்கள் நடிகர் சாட்னாவிற்கு இவ்வளவு பெரிய மகனா?? என ஆச்சரியம் அடைந்துள்ளனர்.