சினிமா

11 ஆபரேஷன்! 33 வயதில் பிரபல நடிகை மரணம்! சோகத்தில் கண்ணீர் விடும் திரையுலகம்!!

Summary:

தமிழ் சினிமாவில் பச்சை என்கிற காத்து என்ற படத்தில் நடித்திருந்தவர் சரண்யா சசி. இவர் மலையாள

தமிழ் சினிமாவில் பச்சை என்கிற காத்து என்ற படத்தில் நடித்திருந்தவர் சரண்யா சசி. இவர் மலையாளத்தில் சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகை சரண்யா சசிக்கு மூளையில் கட்டி ஏற்பட்டுள்ளது. மேலும் இதற்காக அவருக்கு 11 முறை அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது. அறுவை சிகிச்சைக்காக மலையாள நடிகர், நடிகைகள் பலரும் பண உதவி செய்துள்ளனர்.

மேலும் இந்த நிலையிலேயே அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் கடந்த மே மாதம் 23-ந்தேதி திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதற்கிடையில் சரண்யாவின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் நடிகை சரண்யா சசி  உயிரி ழந்துள்ளார். இவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும்  சோகத்துடன் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Advertisement