அடஅட.. எவ்ளோ நல்ல மனசு! கொரோனா காலத்திலும், துணிவோடு நடிகை சரண்யா செய்த காரியம்!! உருக்கமாக வெளியிட்ட பதிவு!!

அடஅட.. எவ்ளோ நல்ல மனசு! கொரோனா காலத்திலும், துணிவோடு நடிகை சரண்யா செய்த காரியம்!! உருக்கமாக வெளியிட்ட பதிவு!!


actress saranya donate food for corono affaected people

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நெஞ்சிருக்கும் வரை, ஆயுத எழுத்து போன்ற தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை சரண்யா துராடி. சமூக சேவகியுமான இவர் தற்போது தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலையாக பரவி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவளித்து வருகிறார். 

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உணவளிக்கும் சேவையில் 2வது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறேன். லாக் டவுன் என்பதால் தினமும் காலையில் நானே வண்டியை எடுத்து கொண்டு உணவு பொட்டலங்களோடு கிளம்புகிறேன்.

இரட்டை மாஸ்க் மற்றும் சானிடைசர் பாட்டிலோடு தடுப்பூசி தந்த துணிவே துணையென்று கிளம்பினாலும் ஒவ்வொரு நாளும் தெரிந்த வட்டத்தில் நிகழும் மரணச் செய்தி கலக்கத்தை கொடுக்கிறது. பசித்த முகத்தில் தெரியும் நன்றியும் அன்புமே இந்த கடினமான சூழலை கடக்க உதவுகிறது.

நல் உள்ளங்கள் சிலர் தங்களால் ஆன நிதி அனுப்பி உணவளிக்கும் என் கரங்களுக்கு வலு சேர்த்து இருக்கிறீர்கள். அத்தனை பேருக்கும் என் மரியாதையும் பேரன்பும். தொடர்ந்து பசியாற்றுவோம் என தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.