சினிமா

நடிகை சரண்யா வீட்டில் நடந்த விசேஷம்! அட.. அவருக்கு இவ்வளவு அழகிய மகள்களா!! வைரலாகும் புகைப்படம்!!

Summary:

நடிகை சரண்யா மற்றும் பொன்வண்ணன் தம்பதியினரின் மூத்த மகள் பிரியதர்ஷினிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக விளங்கி வரும் சரண்யா மற்றும் பொன்வண்ணனின் மகளுக்கு சமீபத்தில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது.

 ஏராளமான தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை சரண்யா. அவரது கணவர் பொன்வண்ணனும் பிரபல நடிகர் ஆவார். நடிகை சரண்யா தற்போது பல உச்ச நட்சத்திரங்களுக்கும் அம்மாவாக நடித்து அனைவரையும் கவர்ந்து வருகிறார். தமிழ் சினிமாவில் அம்மா என்றாலே முதலில் நினைவுக்கு வருவது சரண்யா பொன்வண்ணன்தான்.

மேலும் பொன்வண்ணனும் சினிமா மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட அவர் சித்தி 2 தொடரில் நடித்து பின்னர் அதிலிருந்து நீங்கினார். இந்த தம்பதியினருக்கு பிரியதர்ஷினி மற்றும் சாந்தினி என இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில் சமீபத்தில் பிரியதர்ஷினி பொன்வண்ணனுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. அதில் அவர்களது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.


 


Advertisement