தமிழகம் சினிமா

நடிகர் விஜயுடன் நடித்ததால் தான் என் வாழ்கை இவாறு ஆனது!. வருத்தத்துடன் குமுறும் பிரபல நடிகை!.

Summary:

நடிகர் விஜயுடன் நடித்ததால் தான் என் வாழ்கை இவாறு ஆனது!. வருத்தத்துடன் குமுறும் பிரபல நடிகை!.

 விஜய் மற்றும் அஜித்துக்கு பல்வேறு படங்களில் ஜோடியாக நடித்தவர் நடிகை சங்கவி. முக்கியமாக நடிகர் விஜய்யின் அப்பாவும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கிய ‘ரசிகன்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த சங்கவி, கவர்ச்சியில் அனைவராலும் கவரப்பட்டார்.

இதைத்தொடர்ந்து விஜய்யுடன் ஜோடியாக விஷ்ணு, கோயமுத்தூர் மாப்ளே உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். எல்லா படங்களிலும் கிளமராக நடித்து வந்த அவருக்கு ‘சேரன்’ இயக்கிய பொற்காலம் திருப்புமுனையை ஏற்படுத்தியிருப்பதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில், நடிக்க வந்த புதிதில் கிளாமர் வேடங்களே எனக்கு கிடைத்தன. எனது திறமையை வெளிப்படுத்தும் விதமாக கதாபாத்திரங்கள் அமையவில்லை.

மேலும் விஜய்யுடன் ரசிகன் படத்தில் கவர்ச்சியாக நடித்ததால் அதுமாதிரியே வாய்ப்புகள் வந்தன. இதைக் கண்டு மிகவும் வருத்தப்பட்டேன்.

பின்னர் பொற்காலம் படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்தாலும்.ஹோம்லியான வேடமாக இருந்தது. அந்தப் படம் எனக்கு திருப்புமுனையாக அமைந்ததுடன், அடுத்த குடும்ப பாங்கான வேடத்தில் நடிக்க வாய்ப்புகள் வந்தன என்று கூறியிருக்கிறார்.


Advertisement