வலிமை படத்தில் தல அஜித் எப்படி இருப்பார் தெரியுமா? பிரபல நடிகை கூறிய மாஸ் தகவல்! உற்சாகத்தில் ரசிகர்கள்!!.actress sangeetha about ajith look in valimai movie

தமிழ் சினிமாவில் எக்கச்சக்கமான மாஸ் சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து  நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் தல அஜித். இவருக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. தல அஜித் தற்போது ஹெச்.வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் அவர் ஆக்ஷன் கலந்த போலீஸ் அதிகாரியாக நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியானது. இதன் இறுதிகட்ட படப்பிடிப்பு மட்டும் நடைபெறவிருந்த நிலையில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தள்ளி போயுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர்.

Valimai

இந்நிலையில் வலிமை படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகை சங்கீதா  இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் உரையாடியபோது  வலிமை  படத்தில் அஜித்தின் கேரக்டர் குறித்து கூறியுள்ளார். அப்பொழுது அவர், இந்தப்படத்தில் அஜித் இதற்கு முன் நடிக்காத கேரக்டரில் நடித்துள்ளார். 10 முதல் 15 வயது வரை அவர் வயது குறைந்து செம ஸ்மார்ட்டாக இருப்பார் என கூறியுள்ளாராம்.