சினிமா Covid-19

ப்ளீஸ் உதவி செய்யுங்கள்! கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெற்றோர்! கெஞ்சிய கோமாளி பட நடிகை! எதற்காக தெரியுமா??

Summary:

கடந்த ஆண்டு நாடு முழுவதும் தொடங்கிய கொரோனா பரவல் இடையில் சற்று குறைந்திருந்த நிலையில் தற்ப

கடந்த ஆண்டு நாடு முழுவதும் தொடங்கிய கொரோனா பரவல் இடையில் சற்று குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் இரண்டாவது அலையாக தீவிரமாக பரவி வருகிறது.  நாள் ஒன்றுக்கு லட்சக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். மேலும் ஆயிரக்கணக்கில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது.

இவ்வாறு அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையால் ஆக்ஸிஜன்  மற்றும் நோயின் தீவிரத்தைக் குறைப்பதற்காக பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் மக்கள் பெருமளவில் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கோமாளி பட நடிகை சம்யுக்தா ஹெக்டே உதவி கேட்டு தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

           

அதில் அவர், எனது பெற்றோருக்கு கொரோனோ உறுதி செய்யப்பட்டுள்ளது. எனது தந்தைக்கு உடனடியாக ரெம்டெசிவர் ஊசி தேவைப்படுகிறது. நான் எனக்கு தெரிந்தவர்களிடமெல்லாம் கேட்டுவிட்டேன் கிடைக்கவில்லை, தயவு செய்து உதவுங்கள் என கேட்டுள்ளார்.

மேலும் அவர் எனது தந்தை மருத்துவமனைக்கு செல்வதை தவிர்ப்பதால் அவரை வீட்டில் கண்காணித்து வருவதாகவும் தனக்கு  6 ரெம்டெசிவிர் குப்பிகள் தேவைபடுகிறது என்றும் பதிவிட்டுள்ளார். 


Advertisement