சினிமா

அந்த ஒருநாள் அஜித் பெண்ணாக மாறவேண்டும்.! ஷாக் கொடுத்த பிரபல நடிகை!! இதுதான் காரணமா?

Summary:

actress sammu wish to change ajith as girl

தமிழ் சினிமாவில் ஏராளமான வற்றி திரைப்படங்களில் நடித்து  முன்னணி நடிகராக இருப்பவர் தல அஜித். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி  உலகம் முழுவதும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவரது படங்கள் வெளியாகும் நாட்கள் மற்றும் அவரது பிறந்தநாளை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருவர்.

இந்நிலையில் இயக்குனர் சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது.ஷாலு சம்மு க்கான பட முடிவு

அதனை தொடர்ந்து அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்துவருகிறார் அஜித். படம் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.இவருக்கு ஏராளமான நடிகர், நடிகைகளும் ரசிகர்களாக உள்ளனர்.

இந்நிலையில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் சிறுகதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஷாலு சம்மு, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடும் போது , நீங்கள் அழகிய ஆணாக மாறினால், சினிமா துறையில் யாருடன் டேட்டிங்  செய்வீர்கள் என்று நெட்டிசன் ஒருவர் கேட்டுள்ளார்.
அதற்கு சம்மு, நான் அவ்வாறு மாறினால் அஜித் அந்த ஒருநாள் பெண்ணாக மாறவேண்டும் என பதிலளித்துள்ளார்


Advertisement