13 ஆண்டு காதல்.. ஒரு வழியாக திருமணத்தை முடித்த விஜய் டிவி பிரபல நடிகர்.! குவியும் வாழ்த்துக்கள்!!
படுக்கையில் இருந்தே எழ முடியவில்லை.. கவலைக்கிடமான சமந்தாவின் நிலை.. வெளிநாட்டில் சிகிச்சை பெற முடிவா?..!
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வரும் சமந்தா, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் பாணா காத்தாடி படத்தின் மூலமாக திரையுலகுக்கு அறிமுகமானார்.
தெலுங்கு திரையுலகில் உச்ச நட்சத்திரமாக இருந்து வந்த நாக சைதன்யாவை திருமணம் செய்த சமந்தா, சில மாதங்களில் கணவரை விவாகரத்து செய்து பிரிந்தார். அதனைதொர்ந்து, புஷ்பா உட்பட சில படங்களில் நடித்து வந்த சமந்தா, இறுதியாக யசோதா என்ற படத்தில் நடித்து வந்தார்.
இந்நிலையில், அவர் கடந்த சில வாரங்களாகவே மயோசிடிஸ் என்ற நோயினால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளதாக தெரிவித்து இருந்தார். இதற்காக பிரத்தியேக சிகிச்சையும் பெற்று வருகிறார்.
சமந்தா நோய்வாய்ப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கிடையில், அவர் தென்கொரியா சென்று மயோசிடிஸ் நோய்க்காக சிகிச்சை பெற திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அவர் தனது ரசிகர்களுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அளித்துள்ள விளக்கத்தில், என்னால் படுக்கையில் இருந்து எழுந்துகொள்ள முடியவில்லை. நோயின் தீவிரம் அதிகமாக இருந்தாலும், அதில் இருந்து மீண்டு வர முயற்சித்து வருகிறேன்" என தெரிவித்துள்ளார்.