நான் இப்போ அந்த மூட்ல இருக்கேன்.. புகைப்படம் வெளியிட்டு கிறங்கடிக்க சமந்தாActress samantha deepavali special Instagram photos goes viral

தான் தீபாவளி மூடில் இருப்பதாக நடிகை சமந்தா தனது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தமிழ், தெலுங்கு என தென்னிந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. தமிழில் விஜய், சூர்யா, விக்ரம் என பெரும்பாலான டாப் ஹீரோக்களின் படங்களில் நாயகியாக நடித்துவிட்டார் சமந்தா. சினிமாவில் புகழின் உச்சத்தில் இருந்த இவர் பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

samantha

தற்போது சினிமா, குடும்பம் என பிசியாக இருந்துவரும் இவர் சமூக வலைத்தளங்களிலும் பயங்கர ஆக்டிவாக உள்ளார். எப்போதும் தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வைரலாக்கிவரும் இவர் தற்போது தான் தீபாவளி பெஸ்டிவல் மூடில் இருப்பதாகவும், தனது ரசிகர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் விதமாக புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்து  தெரிவித்துள்ளார் .தற்போது அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்...