ஆசையாக அழைத்து பேன்டீன் ஷாம்பு கொடுத்த வைரமுத்து - புயலை கிளப்பிய பாடகி சுசித்ரா.!
அட நம்ம சாய் பல்லவி இது... சிறுவயதில் இவ்வளவு க்யூட்டாக இருக்காரே... வைரலாகும் புகைப்படம்!!
மலையாளத்தில் நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக நடித்து பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்ததுடன் ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளமும் உருவானது. அதனை தொடர்ந்து தமிழில் மாரி 2 , என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்துள்ளார்.
இவர் முதன் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் பிரபு தேவா என்ற நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தெலுங்கு சினிமாவிலும் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
அதனை தொடர்ந்து சாய்பல்லவி வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளத்தில் சாய்பல்லவியின் சிறு வயது புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அட நம்ம சாய் பல்லவியை இது? சிறு வயதில் செம க்யூட்டாக இருக்காரே என கமெண்ட் செய்து வருகின்றனர்.