சினிமா

கேரளா உடையில், கொள்ளை அழகில் நடிகை சாய் பல்லவி! வைரல் புகைப்படம்!

Summary:

Actress sai pallavi in kerala trending saree photos

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. இவர் ஒரு நடன கலைஞர் மற்றும் மருத்துவரும் கூட. இந்நிலையில் மலையாளத்தில் வெளியான ப்ரேமம் படம் மூலம் ஒரே நாளில் தென்னிந்திய சினிமாவில் பிரபலமாகிவிட்டார் சாய் பல்லவி.

முதல் படமே மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் வரிசையாக நடிக்க தொடங்கினர் சாய் பல்லவி. இயக்குனர் AL விஜய் இயக்கத்தில் கரு, மேலும் ஒருசில மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்துள்ளார் சாய் பல்லவி.

சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இந்நிலையில் இயக்குனர் AL விஜய்க்கும் சாய் பல்லவிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால், இதுவெறும் வதந்தி என்று இயக்குனர் விஜய் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

இந்நிலையில் கேரளா உடையில் கொள்ளைகொள்ளும் அழகில் நடிகை சாய் பல்லவி வெளியிட்டுள்ள புகைப்படம் செம வைராலகிவருகிறது. இதோ அந்த புகைப்படம். 


Advertisement