சினிமா

அழகிய ரியல் ஜோடிகளான ரீல் ஜோடி! பிரபல நடிகரை கரம்பிடித்த நடிகை ரேஷ்மா! வைரலாகும் கியூட் புகைப்படம்!!

Summary:

ரியல் ஜோடிகளான ரீல் ஜோடி! பிரபல நடிகரை கரம்பிடித்த நடிகை ரேஷ்மா! வைரலாகும் கியூட் புகைப்படம்!!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற பூவே பூச்சூடவா தொடரில் நாயகியாக சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் ரேஷ்மா. இவர் டான்ஸ் ஜோடி டான்ஸ்  நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பரிச்சயமானவர். 

அதே சீரியலில் சுந்தர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் மதன். அவரும் பல தொடர்களில் நடித்துள்ளார். மேலும் ரேஷ்மா மற்றும் மதன்  இருவரும் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் அபி டெய்லர் என்ற தொடரில் ஜோடியாக நடித்து வருகின்றனர். இருவரும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இருவருக்கும் திருமணம் எப்பொழுது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் ரேஷ்மா மற்றும் மதன் இருவருக்கும் இன்று கோலாகலமாகத் திருமணம் நடைபெற்றுள்ளது. அவர்கள் திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் அவர்களது அழகிய திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Advertisement