இறந்தது என் கணவர் கிடையாது! தீயாய் பரவும் தகவல்! அதிரடி விளக்கமளித்த பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை!

இறந்தது என் கணவர் கிடையாது! தீயாய் பரவும் தகவல்! அதிரடி விளக்கமளித்த பிரபல விஜய் டிவி சீரியல் நடிகை!


actress-rekha-talk-about-man-dead

பெரம்பூர், நடராஜன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கோபிநாத். இவர் அண்ணா நகர் பகுதியில் உள்ள தனியார் விளம்பர நிறுவனம் ஒன்றில்  மானேஜராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில், நேற்று கோபிநாத் அலுவலகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்துள்ளார். 

அதனை தொடர்ந்து தகவலளிக்கபட்ட நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் கோபிநாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை தொடர்ந்து அவர்கள் தீவிரவிசாரணையில் ஈடுபட்ட நிலையில் அவர் சின்னத்திரையில் தொலைக்காட்சி தொடர் நடிகையும், நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் நடிகை ரேகா ஜெனிபர் என தெரியவந்தது. 

rekha

இந்நிலையில், கோபிநாத்துக்கு  தன்னுடன் பணிபுரியும் பெண் ஒருவருடன் தகாத தொடர்பு இருப்பதாகவும், இதனை தெரிந்து கொண்ட ரேகா, அவரிடம் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும் இவ்வாறு கிறிஸ்துமஸ் விடுமுறை தினத்தில் இருவரும் சண்டை போட்டுள்ளனர். இதனால்மனமுடைந்த  கோபி, அலுவலகத்துக்கு சென்று  தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

rekha

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடர் நடிகையான ரேகாவின் கணவர்தான் அவர் என தகவல்கள் பரவி வந்த நிலையில் அவர் செய்தியாளர்களிடம் உயிரிழந்த நபர் மற்றொரு தொலைக்காட்சி நாடக நடிகையான ஜெனிபர் ரேகாவின் கணவர் என்றும், தமது கணவர் கிடையாது என்றும் விளக்கமளித்துள்ளார். மேலும் நங்கள் இருவரும் நன்றாக உள்ளோம் எனவும் கூறியுள்ளார்.