சினிமா

ஒன்றரை வருஷமாச்சு.. மகளை பிரிந்து தவிதவிக்கும் நடிகை ரேகா! என்னாச்சு! இதுதான் காரணமா??

Summary:

ஒன்றரை வருஷமாச்சு.. மகளை பிரிந்து தவிதவிக்கும் நடிகை ரேகா! என்னாச்சு! இதுதான் காரணமா??

தென்னிந்திய சினிமாவுலகில் 80 மற்றும் 90ஸ் காலகட்டத்தில் பல படங்களில் நடித்து மிக பிரபலமான நடிகையாக வலம் வந்தவர் ரேகா. இவர் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக திகழும் ரஜினி, கமல், சத்யராஜ் என பல பிரபலங்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் கடலோரக் கவிதைகள் படத்தில் நடித்த டீச்சர் கதாபாத்திரம் இன்றும் ரசிகர்களால் மறக்கமுடியாத ஒன்றாக உள்ளது.

நடிகை ரேகா தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு, கன்னடம் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ரேகா விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளார். அவர் கடந்த 1996 ஆம் ஆண்டு ஜார்ஜ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய மகள் உள்ளார்.

இந்த நிலையில் ரேகா தற்போது தனது மகளை பார்க்காமல் தவிப்பதாக சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதாவது ரேகாவின் மகள் அமெரிக்காவில் படித்து, பின் அங்கேயே வேலை பார்த்து வருகிறாராம். இந்த நிலையில் கடந்த சில வருடங்களாகவே கொரோனா உலகம் முழுவதும் கோரதாண்டவமாடி வரும் நிலையில் அவரால் சென்னைக்கு திரும்ப முடியவில்லை. மகளை தனியே விட்டு சுமார் ஒன்றரை வருடங்கள் ஆகிவிட்டது. அதோடு விசா கிடைக்காமல் நானும் என் கணவரும் கவலையுடன் இருக்கின்றோம் என ரேகா கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

 

 


Advertisement