சினிமா

கண்ணின் மணி... கண்ணின் மணி நிஜம் கேளம்மா.. மீண்டும் வருகிறார் சித்தி ராதிகா! குஷியில் ரசிகர்கள்!

Summary:

Actress Rathika again new serial


தற்போது ஒளிபரப்பாகும் சீரியல் தொடர்கள் அனைத்தும் சினிமாவை போல மிகவும் பிரமாண்டமாக போய்க்கொண்டிருக்கின்றன. 

ஒரு காலத்தில் இரவு 9.30 மணி ஆனாலே எல்லோரையும் தொலைக்காட்சி முன் உட்கார வைத்தது மெகா தொடர் சீரியல் "சித்தி" அதனையடுத்து செல்லமே, வாணி ராணி, சந்திரகுமாரி என இரவு 9.30 மணி சீரியலில் ராதிகா அசத்தினார். 

ஆனால் நடிகை ராதிகா நடித்த சித்தி சீரியலின் டைட்டில் சாங் இன்றும் மக்கள் மனதில் மனதில் பதிந்துள்ளது. கிராமங்களில் "கண்ணின் மணி... கண்ணின் மணி நிஜம் கேளம்மா.." என்ற பாடல் சத்தம் கேட்டதும் அனைவரும் தொலைக்காட்சியை நோக்கி ஓடுவார்கள். அந்த அல்லாஹ்விற்கு பிரமாண்டமாகவும் விறுவிறுப்பாகவும் போனது சித்தி சீரியல்.

இந்த நிலையில் தற்போது இந்த சீரியலில் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன. அதற்கான நடிகர்கள் தேர்வு நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகை ராதிகா, பொன்வண்ணன் மற்றும் பல பிரபலங்கள் நடிக்க இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.


Advertisement