சினிமா

எப்படி இருந்த நீ.. இப்படி ஆகிட்டியேமா..! நடிகை ராஸ்மிகா மந்தனாவின் வைரல் வீடியோ!

Summary:

நடிகை ராஸ்மிகா  மந்தனாவின் சுல்தான் படப்பிடிப்பு வீடியோ.

நடிகை ராஸ்மிகா  மந்தனாவின் சுல்தான் படப்பிடிப்பு வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.

நடிகர் விஜய தேவரகொண்டாவுடன் இணைந்து  கீதாகோவிந்தம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு மற்றும் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா . மேலும் அப்படத்தில் இடம்பெற்ற இன்கேம் இன்கேம் பாடல் மூலம் அவர் இளைஞர்கள் மத்தியில் கனவுக்கன்னியாக கொடிகட்டி பறந்தார்.

தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இடுப்பில் துண்டு கட்டி வயலில் இறங்கி வேலை செய்யும் வீடியோ ஒன்றை அவரது இன்ஸ்டாராகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி லைக்ஸ் பெற்று வருகிறது.


Advertisement