சினிமா

அடேங்கப்பா! குட்டி உடையில் உடற்பயிற்சி செய்யும் ராஷ்மிகா மந்தனா - வொர்க் அவுட் வீடியோ

Summary:

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள ஒர்கவுட் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

நடிகை ராஷ்மிகா மந்தனா வெளியிட்டுள்ள ஒர்கவுட் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.

கீதா கோவிந்தம் என்ற திரைப்படம் மூலம் தெலுங்கு, தமிழ் என தென்னிந்தியா முழுவதும் பிரபலமானார் நடிகை  ராஷ்மிகா மந்தனா. தற்போது தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் இவர் ‘ரெமோ’ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘சுல்தான்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்.

சுல்தான் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்துவருகிறது. படம் வரும் பொங்கலுக்கு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ரசிகர்கள் மத்தியில் எக்ஸ்பிரெஷன் குயின் என பெயர் எடுத்திருக்கும் ராஷ்மிகா தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோவிற்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்து வருகிறது.


Advertisement