கைமாறியதா பவர்?? பிரதமர் ஆகிறார் நடிகை ரஞ்சிதா.! அதுவும் எந்த நாட்டிற்கு தெரியுமா??

கைமாறியதா பவர்?? பிரதமர் ஆகிறார் நடிகை ரஞ்சிதா.! அதுவும் எந்த நாட்டிற்கு தெரியுமா??


actress-ranjitha-is-the-prime-minister-in-kailasa-count

பாலியல், கடத்தல், கற்பழிப்பு என பல வழக்குகள் கொண்டு போலீஸாரால் தேடப்பட்டவர் நித்யானந்தா சுவாமி. இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு தலைமறைவான அவர் கைலாசா என்ற தீவுக்கு சென்றதாகவும், அதனை தனி நாடாக உருவாக்கியுள்ளதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

அந்த நாட்டை ஹிந்துக்களுக்காக உருவாக்கியதாக கூறி அதற்கு தனிக் கொடி, பாஸ்போர்ட், நாணயம் உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அவர் அவ்வப்போது சொற்பொழிவாற்றி அந்த வீடியோக்களையும் இணையத்தில் பகிர்ந்து வருகிறார். மேலும் கைலாசா சார்பில் பெண் பிரதிநிதிகள் ஐ.நா.சபை மாநாட்டில் பங்கேற்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் சமீபத்தில் இணையதள செயலியான லிங்க்டு இன் பக்கத்தில் நடிகையும், நித்தியானந்தா சுவாமியின் தீவிர சீடருமான ரஞ்சிதாவின் புகைப்படம் நித்யானந்தா மாயி சுவாமி என்ற பெயரில் இருந்துள்ளது. அதற்கு கீழே கைலாசாவின் பிரதமர் என குறிப்பிடப்பட்டு இருந்துள்ளது. அது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.