என் ஆடையை கிழித்து.. கொடுமை! அண்ணாத்த நடிகை அளித்த அதிர்ச்சி புகார்!! என்ன நடந்தது??

என் ஆடையை கிழித்து.. கொடுமை! அண்ணாத்த நடிகை அளித்த அதிர்ச்சி புகார்!! என்ன நடந்தது??


Actress ranjana nachiar complaint on father in law

தமிழ் சினிமாவில் தேவராட்டம், அண்ணாத்த, நட்பே துணை, எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ரஞ்சனா நாச்சியார். இவர் சினிமா மட்டுமின்றி சில சின்னத்திரை தொடர்களிலும் நடித்திருக்கிறார். இவருக்கும் சுரேஷ் குமார் என்பவருடன் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். 

இந்நிலையில் ரஞ்சனா நாச்சியார் சென்னை மாங்காடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தனது மாமனார் 73 வயது நிறைந்த சரவணவேல் மற்றும் அவரது மனைவி மீது புகார் அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், எனது கணவர் சற்று மனநிலை சரியில்லாதவர். அவரை திருமணம் செய்து வைத்து என்னை ஏமாற்றிவிட்டனர். தற்போது அவர் மன நல சிகிச்சை பெற்று வருகிறார்.

complaint

இந்நிலையில் எனது மாமனார் சரவணவேலும் அவரது மனைவியுடன் என் ஆடையை கிழித்து, கடுமையாக தாக்கி மிகவும் கொடுமைப்படுத்தி வந்தனர்.  இதுகுறித்து பலமுறை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும் அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என் மாமனார் என்னைக் காயப்படுத்தியதில் நான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன் என்று கூறியுள்ளார்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.