சூப்பர்ஸ்டார் படத்தில் நடிக்க 'நோ' சொன்ன பிரபல நடிகை..! காரணம் இந்த இயக்குநர்தானாம்..! 

சூப்பர்ஸ்டார் படத்தில் நடிக்க 'நோ' சொன்ன பிரபல நடிகை..! காரணம் இந்த இயக்குநர்தானாம்..! 


actress-priyanka-mohan-reject-superstar-rajinikanth-mov

தமிழில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா மோகன். இவர் இதன்பின் சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைந்து டான் மற்றும் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களிலும் நடித்திருந்தார்.

அடுத்ததாக ஜெயம் ரவியின் 30-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்னதாக ரஜினியின் ஜெயிலர் படத்தில், பிரியங்கா மோகன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. 

Priyanka mohan

அதன்படி பிரியங்கா மோகனை படத்தில் நடிக்கவைக்கவும் ஜெயிலர் படக்குழுவினர் அணுகியுள்ளார்களாம். ஆனால் ஜெயிலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பை பிரியங்கா மோகன் நிராகரித்துவிட்டார் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் நெல்சன்தான் என கூறப்படுகிறது.

ஏனெனில் முன்பே டாக்டர் திரைப்படத்தில் நெல்சன் இயக்கத்தில் பிரியங்கா நடித்திருந்தார். இதனால் இருவரையும் வைத்து சில கிசுகிசுக்கள் எழப்பட்டது. இதன் காரணமாக மீண்டும் நெல்சன் இயக்கத்தில் நடிக்க வேண்டாம் என்று பிரியங்கா முடிவு செய்துள்ளதாக கோலிவுட் வட்டாரம் பேசி வருகிறது. ஆனால் இந்த தகவல் வதந்தியா? அல்லது உண்மையா? என்பது தெரியவில்லை.