சினிமா

அடேங்கப்பா! நடிகை பிரியா பவானி சங்கரா இது? இப்படியெல்லாம் கூட புகைப்படம் வெளியிட முடியுமா?

Summary:

Actress priya bhavani shankar new photos

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். இளைஞர்களையும் டிவி சீரியல் பார்க்க வைத்ததில் அம்மணிக்கு முக்கிய பங்கு உண்டு. இவருக்காகவே அந்த சீரியலை பார்த்த இளைஞர்கள் ஏராளம்.

ஒருகட்டத்தில் புகழின் உச்சிக்கு சென்ற ப்ரியா தான் நடித்த டிவி சீரியலை விட்டுவிட்டு வெள்ளித்திரை பக்கம் சென்றார். மேயாத மான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.

அதை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்குக்கு அக்கா பொன்னாக நடித்திருந்தார். மேலும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் அம்மணி தற்போது வித்தியாசமான புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளார். 

அந்த புகைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தோ அந்த புகைப்படம் உங்களுக்காக.


Advertisement