மோகன்லால், பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள எல்2:எம்பூரான் திரைப்படம் வெளியீடு தேதி அறிவிப்பு.!
"இந்த இயக்குனர் கூப்பிட்டா கதையை கூட கேட்க மாட்டேன், எந்த மாதிரி கதாபாத்திரத்தில் வேணுமானாலும் நடித்துக் கொடுப்பேன்" பிரியா பவானி சங்கர் பேட்டி.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வருபவர் பிரியா பவானி சங்கர். இவர் ஆரம்ப காலத்தில் சின்ன திரையில் சீரியல் மூலம் அறிமுகமானார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாண முதல் காதல் வரை சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இதன் பின்பு சில சீரியல்களில் நடித்தபின் சின்னத்திரையிலிருந்து வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்தார். முதன் முதலில் வெள்ளித்திரையில் 'மேயாத மான்' திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படத்திலேயே இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டு வந்தது. இப்படத்திற்கு பின்பு பல முன்னணி நடிகர்களுடன் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
பிரியா பவானி சங்கர் தற்போது இவர் கமல் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் 'இந்தியன்2' திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் டிமான்டி காலனி மற்றும் ஹரி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்று கூறப்பட்டு வருகிறது.
இது போன்ற நிலையில், சமீபத்தில் ப்ரியா பவானி சங்கர் அளித்த பேட்டியில் வெற்றிமாறன் மற்றும் நெல்சன் வெங்கடேசன் இந்த இரு இயக்குனர்களும் நடிக்க அழைத்தால் கதையைக் கூட கேட்காமல் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.