இரவின் நிழல்! நிர்வாண காட்சியில் நடித்தது குறித்து நடிகை பிரிகிடா உடைத்த உண்மை! ஷாக்கில் ரசிகர்கள்!!

இரவின் நிழல்! நிர்வாண காட்சியில் நடித்தது குறித்து நடிகை பிரிகிடா உடைத்த உண்மை! ஷாக்கில் ரசிகர்கள்!!


actress-prikitha-say-about-act-as-nude-in-iravin-nizhal

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக, வித்தியாசமான கதைகளை கொடுப்பதில் கைதேர்ந்தவருமான பார்த்திபன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'இரவின் நிழல்'. இந்த படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம். இந்தப் படத்தை அகிரா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

இரவின் நிழல் படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக பிரிகிடா நடித்துள்ளார். மேலும் வரலட்சுமி சரத்குமார், ரோபோ சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். இந்தப்படத்தில் ஒரு காட்சியில் பிரிகிடா நிர்வாணமாக நடித்திருந்தார். அது பரபரப்பாக பேசப்பட்டது.

Iravin nizhal

இதுகுறித்து முன்பு அவர் முன்பு அளித்த பேட்டியில், அந்த கதாபாத்திரம் ரொம்ப புனிதமானது. அவர் நடிக்க முதலில் யோசித்தேன்.  என் பெற்றோர்களிடம் எப்படி சொல்வது என தயக்கமாக இருந்தது. பின்னர் எனது கதாபாத்திரம், அந்த சீன் குறித்து பார்த்திபன் சார் எனது பெற்றோரிடம் எடுத்துக் கூறி சம்மதம் வாங்கினார் எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவர் தற்போது அளித்த பேட்டியில், அந்தக் காட்சியில் நான் நிர்வாணமாக நடிக்கவில்லை. நடிக்கும்போது ஷார்ட்ஸ் மற்றும் டாப் அணிந்திருந்தேன். ஆனால் பலரும் நான் நிர்வாணமாக நடித்ததாகவே நினைத்து விட்டனர் என கூறியுள்ளார்.