அடேங்கப்பா.. இந்த வயசுல இப்படியா! ஊ சொல்றியா பாடலுக்கு அம்மா நடிகை போட்ட ஆட்டத்தை பார்த்தீங்களா!

அடேங்கப்பா.. இந்த வயசுல இப்படியா! ஊ சொல்றியா பாடலுக்கு அம்மா நடிகை போட்ட ஆட்டத்தை பார்த்தீங்களா!


actress-pragathi-dance-for-oo-soldriya-song-video-viral

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் திரைப்படம் புஷ்பா. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என 5 மொழிகளில் உருவாகியுள்ளது. இப்படத்தில் இடம்பெற்று இப்போது பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பிவரும் பாடல் ஊ சொல்றியா மாமா...

இந்த பாடலுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வரும் சமந்தா கவர்ச்சி குத்தாட்டம் போட்டிருந்தார். இந்த பாடலில் அவரது நடனம் அனைவரையும் பெருமளவில் கவர்ந்தது. மேலும் பல பிரபலங்களும் அந்த பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா, சீரியல்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரகதி ஊ சொல்றியா மாமா பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலான நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் இந்த வயதில் இப்படியொரு ஆட்டமா? என ககமெண்டு செய்து வருகின்றனர்.