சினிமா

ப்பா.. ஒரு நடுவர் செய்ற வேலையா இது! டான்ஸ் ஷோவில் இளைஞரை அழைத்து நடிகை பூர்ணா செய்த காரியத்தை பார்த்தீர்களா!!

Summary:

தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்

தமிழ் சினிமாவில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூர்ணா. அதனைத் தொடர்ந்து அவர்  அர்ஜுனன் காதலி, கொடைக்கானல், துரோகி, ஆடு புலி, சகல கலா வல்லவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது அவரது கைவசம் தமிழில் படம் பேசும், அம்மாயி போன்ற படங்கள் உள்ளன. 

பூர்ணா சமீபத்தில் வெளிவந்த தலைவி படத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா  கதாபாத்திரத்தில் நடித்தார். மேலும் பிசாசு 2 படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறார். நடிகை பூர்ணா தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு மொழி படங்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் நடிப்பது மட்டுமின்றி, தெலுங்கில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியிலும் நடுவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் டான்ஸ் ஷோவில் சிறப்பாக நடனமாடிய போட்டியாளரை பாராட்டும் விதமாக அவரை அழைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி அந்த நபரின் கன்னத்தை செல்லமாக கடித்துள்ளார். இந்த வீடியோவை நெட்டிசன்கள் இணையத்தில் பகிர்ந்து, நடுவர் செய்ற காரியமா இது?  என விமர்சனம் செய்து வருகின்றனர். 

 

 


Advertisement